ஆசிரம கொள்கை


திருமயிலை சிவஞான நடராஜ சுவாமிகள், தான் பெற்ற முக்தி நிலையை அனைவரும் பெறுவதற்கு முக்கியமான சில கொள்கைகளை ஏற்படுத்தினார்.

இங்கு வருபவர்கள் (யோகத்தை நாடுபவர்கள்) முக்தியை தவிர வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த கூடாது என்றும், முக்திக்கு அடிப்படையான விஷயமான யோகப்பயிற்சி செய்து உடல், உயிர், ஆன்மா, பிறப்பு, இறப்பு, இவற்றின் ரகசியங்களை அறிய யோகத்தை தவிர வேறு எந்த  வழிமுறைகளாலும் உறுதியாக அறியமுடியாது. ஆகவே யோகம் தான் முக்திக்கு வழி என்பதே மிக முக்கியமான கொள்கையாகும். வாழ்க்கை நடத்துவதில் முற்கால முனிவர்கள் போல் அல்லாமல், இல்லத்தை துறக்காமல், தொழிலை விடாமல், கடமையை செய்து முக்திநிலையை அடைய முயற்சிக்கவேண்டும். ஏனென்றால் வாழ்க்கையில் ஏற்படும் இன்பம், துன்பம், ஏமாற்றம், துரோகம், அவமானம் போன்ற பலவித விஷயங்களை அனுபவிக்கும் போது யோகப்பயிற்சியில் சில நிலைகளை கடப்பதற்கு இந்த வாழ்க்கை உதவும்.

இது தனிமையைவிட சமூகத்திலிருந்து கடமை ஆற்றி விருப்பு-வெறுப்பு இல்லாமல் யோக வாழ்க்கையை நடதும்போது அது முக்திநிலையை அடைய முக்கிய வழி வகுக்கும்.

இதை பின்பற்றும் மாணவர்கள் அனைவருக்கும் முக்தியின் அம்ஸத்தை உணர்த்தி, அந்த ஆன்மாக்களின் தகுதிக்கேற்ப அவர்கள் நிலையை உயர்த்திக்கொள்ள இந்த ஆசிரமம் வழிவகுக்கும். இதுதான் ஆசிரம கொள்கையாகும்