நமது குருமார்கள்


திருமயிலை சிவஞான நடராஜ சுவாமிகள்:

Our_guru_photo

திருமயிலை சிவஞான நடராஜ சுவாமிகள் சிறு வயதில் அக்காலத்தில் இளைஞர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய விளையாட்டான குத்துச்சண்டை, சிலம்பம் போன்றவற்றை கற்று உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்தார். அப்போது ஒரு சாமியாரை சந்தித்தார். அவர் இந்த உடலை மட்டும் கவனித்தால் போதாது, அதை விட பல விஷயங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது என்று கூறிச் சென்றுவிட்டார்.

சாமிக்கு உடனடியாக மனமாற்றம் ஏற்பட்டு மறுநாள் அந்த சாமியாரை தேடிச் சென்றார். ஆனால் அவர் அங்கு இல்லை. அன்றிலிருந்து அவர் பல சாமியாரைத் தேடிச் சென்று தனது ஞான வாழ்க்கையை தொடங்கினார். பல சாமியார்களை சந்தித்தார். அதில் குறிப்பிட்ட 53 குருமார்களிடம் உபதேசம் பெற்று பின் பல ஊர்களுக்கும் பல இடங்களுக்கும் சென்று யோக பயிற்சியை விரும்பினவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

வயது முதிர்வின் காரணமாக சென்னை பெரவள்ளூரில் தங்கி (அங்கு ஆசிரமம் அமைத்து) சித்தயோக பயிற்சி நிலையம் ஏற்படுத்தினார். பின்னர் மாணவர்களின் விருப்பப்படி அருகில் ஒரு இடம் வாங்கி அங்கு சமாதி அடைய விரும்பினார். பின்னர் அவர் தனது தேகத்தை ஒளி உடலாக மாற்றுவதற்காக தனிமையில் பயிற்சி செய்ய குடியாத்தம் அருகில் உள்ள காடுகளில் பயிற்சி செய்ய சென்றுவிட்டார். இதையறிந்த மாணவர்கள் தாங்கள் இங்கயே இருந்து கற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அவரை அழைத்து வந்து பெரவள்ளூரில் செல்லியம்மன் கோயில் அருகே சமாதி அமைக்க இடம் வாங்கினர். சுவாமிகளை இங்கயே இருக்கும்படி செய்தனர். சுவாமிகளும் நாம் காட்டுக்கு சென்று ஒளி உடல் பெற்று சென்றுவிட்டால் மற்றவர்களுக்கு தான் ஒரு வழிகாட்டியாக இருக்கமுடியாது என்று மற்றவர்களுக்கு இந்த பயிற்சியை கற்றுத்தர முடிவு செய்தார். மேலும் தான் காடுகளுக்கு சென்று கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட பயிற்சியை மாணவர்கள் குடும்பத்தில் இருந்தபடியே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இங்கேயே இருந்து பயிற்சியை கற்று கொடுத்து மேலும் இந்த இடத்திலேயே சமாதி அடையவும் முடிவு செய்து இங்கேயே இருந்து சமாதியும் அடைந்தார். சமாதி அடைந்தபின் அந்த இடம் சிவஞான ரங்கநாத சுவாமிகளின் மூலம் ஆசிரமமாக வளர்ச்சியுற்றது.

Next