ஞான யோக மார்க்கம்


அன்பு கொண்ட அனைத்து உலக ஆன்மாக்களுக்கும் என் வணக்கம்!

உலகில் பல ஆன்மாக்கள் தோன்றி மறைகின்றன. பல ஆன்மாக்கள் கல்வி, செல்வம், புகழ், அரசியல், விஞ்ஞானம், தொழில் என்று பலவகையான விஷயங்களில் முன்னேறி தன் அனுபவங்களை இவ்வுலகிற்கு தந்துவிட்டுச் செல்கிறது. இதில் மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த வாழ்க்கையான ஆன்ம (ஞான) வாழ்க்கை தான் மிகப்பெரிதும் மதிக்கப்படுகின்ற வாழ்க்கையாகும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை இவ்வுலகிற்கு பல ஞானிகள் வெளிப்படுத்திச் சென்று இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதனுடைய வாழ்க்கையையும், அறிவையும் மேம்படச் செய்வதற்காகத்தான், இந்த வகையில் நான் சொல்லப்போகும் விஷயங்கள் என்னுடையஆன்ம அனுபவத்தால் அறிந்த விஷயங்கள். ஆகவே நான் சொல்லப்போகும் இவ்விஷயங்கள் உலகத்தின் எந்த ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ எதிரான விஷயம் அல்ல. இது முற்றிலும் ஆன்மாவின் அனுபவமும், ஆன்ம ரகசியமும் ஆகும். எல்லோரும் இதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மேலும் இதைபற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும். இதுவே ஒவ்வொரு ஆன்மாவின் கடமையாகும். நானும் இந்த ஆன்ம இரகசியத்தை ஆராய்ச்சி செய்து அதன் உண்மையை கண்டறிந்து இவ்வுலகிற்கு சொல்கிறேன்.

அநேக ஆசிகளுடன்,

குரு திரு சிவஞான நெல்லைராஜ சுவாமிகள